உங்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் என சொல்லிய நடிகர்!
சினிமாவில் நடிக்க பலருக்கு விருப்பம் உண்டு. ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்றால் அது கிடைப்பதில்லை. அதற்காக அவர்கள் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். சிலர் விவரம் தெரிந்த பின் அதை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றனர். மிகப் பலர் விவரம் தெரியும் முன்பே ஊரை விட்டு ஓடி சென்று சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் தற்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஒரு நடிகரால் வழங்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் நடிகர் சித்தார்த். தனது 35வது படத்தில் நடிக்க ஆண், பெண் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இவரின் நடிப்பில் சைத்தான் கே பச்சா, டக்கர் படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
மேலும் சித்தார்த், சர்வானந்த்துடன் இணைந்து நடித்துள்ள மகா சமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது 35வது படமாக இது தயாராகிறது. இந்நிலையில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க 30 முதல் 35 வரையிலான ஆண் நடிகர்கள் வேண்டும். அதேபோல வட இந்திய முகச்சாயல் கொண்ட 30 முதல் 50 வயதுள்ள ஆண் நடிகர்களும் தேவைப்படுகின்றனர். வட இந்திய முகச்சாயல் கொண்ட 20 – 30 வயதுடைய பெண்களும், 6 முதல் 8 வயதுடைய குழந்தை நட்சத்திரங்களும் தேவைப்படுகின்றனர் என்று கூறி உள்ளார்.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் ஐந்து புகைப்படங்களை இந்த siddarth35@gmail.com என்ற மெயிலிலோ அல்லது இந்த வாட்சப் எண்ணிலோ 9626230062 அனுப்பவும் என்று நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார். புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே.

