தீபாவளி பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்யப் போறிங்களா? அப்போ இந்த பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்திவிடுங்கள்!!

Photo of author

By Rupa

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பண்டிகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து சிறப்பாக கொண்டாட பலரும் விரும்புகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று ஐதீகம்.ஆனால் சிலர் வீட்டை சுத்தம் செய்வதை கடினமான வேலையாக பார்க்கிறார்கள்.ஆனால் நமக்கு பிடித்தபடி வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க விருப்பினால் அது கடினமாக தெரியாது.

பூஜை அறை,வீட்டு அலமாரி,படுக்கை அறை,சமையலறை என்று அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.நீங்கள் சுத்தம் செய்யும் போது தேவைப்படாத பொருட்கள் அல்லது உடைந்த பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள்.

கடந்த ஓர் ஆண்டாக நீங்கள் பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். உடைந்த கண்ணாடி பொருட்கள் வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரித்துவிடும்.

அதேபோல் சேதமடைந்த செருப்பு,உடைந்த சிலைகள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். இல்லையென்றால் வறுமை அதிகரித்துவிடும். உடைந்த மற்றும் சேதமடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போய்விடும்.இதனால் பணப் பிரச்சனை,கடன் பிரச்சனை,வறுமை போன்றவற்றை சந்திக்க நேரிடும். வீட்டில் ஒட்டடை இருந்தால் அதை முழுமையாக நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோல் பழுதடைந்த பொருட்கள் இருந்தால் அதை பழுது பார்த்து பயன்படுத்த வேண்டும்.பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை குத்து விளக்குகள்,பித்தளை மற்றும் செம்பு பொருட்களை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.