மத்திய அரசு தரும் மாதம் 5000 ரூபாய் பெற வேண்டுமா? தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் போதும்!

Photo of author

By Rupa

மத்திய அரசு தரும் மாதம் 5000 ரூபாய் பெற வேண்டுமா? தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் போதும்!

தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் நமக்கு மாதம் 5000 ரூபாய் கிடைக்கும். அது எவ்வாறு என்பது பற்றியும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த நபர்கள் பலன் பெறும் வகையில் மத்திய அரசு அடல்  பென்ஷன் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூலமாக நலிவடைந்த கூலித் தொழிலாளிகள் மற்றும் ஏழை தொழிலாளர்கள் அனைவரும் மாத மாதம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தான் இது.

இந்த திட்டம் மூலமாக இதுவரை 7 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலமாக பயன் பெற விரும்பும் நபர்கள் 18 முதல் 40 வயது உள்ள நபர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டம் மூலமாக தினமும் 7 ரூபாய் சேமிக்க வேண்டும். அதாவது மாதம் 210 ரூபாய் சேமித்து வந்தால் 60 வயது ஆகும் பொழுது மாதம் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலமாக விரைவாக 5000 ரூபாய் வரை மாதம் ஓய்வூதியமாக பெறலாம்.

இந்த திட்டம் மூலமாக தினமும் 7 ரூபாய் செலுத்தலாம். அல்லது மாதம் 210 ரூபாய் செலுத்தலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றால் 626 ரூபாய் செலுத்தலாம். அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை என்றால் 1239 ரூபாயும் செலுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு தொகை செலுத்துகின்றீர்களோ அதை பொறுத்து பென்ஷன் தொகை அதிகரிக்கும். அதே போல இந்த திட்டம் மூலமாக மாதம் 42 ரூபாய் செலுத்தி வந்தால் 60 வயதுக்கு மேல் உங்களுக்கு மாதம் 1000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

இந்த பென்ஷன் திட்டத்தில் பிரீமியம் கட்டிக் கொண்டிருக்கும் நபர் இறந்தால் அந்த பென்ஷன் தொகை அவருடைய மனைவிக்கும் ஒரு வேளை இரண்டு பேரும் இறந்துவிட்டால் பிரீமியம் செலுத்தும் நபருடைய நாமினிக்கு இந்த பென்ஷன் தொகை வழங்கப்படும். 60 வயதுக்கு முன்பாக இந்த திட்டத்தில் தொகையை திரும்ப பெற முடியாது. இருப்பினும் மாதம், காலாண்டு, அரையாண்டு என்று பிரீமியம் தொகையை செலுத்திக் கொள்ளலாம். அதே போல வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டை டெபிட் மூலமாக தொகை செலுத்தும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுத்துறை வங்கிகள் அல்லது தனியார் துறை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர்வதற்கு ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் கேட்கப்படும். அதன் பின்னர் இந்த திட்டம் மூலமாக மாதம் 210 ரூபாய் செலுத்தி 60 வயதில் மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.