நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Photo of author

By Amutha

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Amutha

Updated on:

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக கடனாக கொடுத்த பணம் திரும்ப வரவில்லையே என்ற கவலை உங்களுக்கு உள்ளதா?? அப்படியெனில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் கடனாக கொடுத்த பணம், நகை மற்றும் நீங்கள் ஏமாந்த பணமும் கூட உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை என இந்த மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள்
1. ஒரு வெற்றிலை.
2. பச்சைக் கற்பூரம்.
3. வெள்ளை நிறத் துணி அல்லது பேப்பர்.

** வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதில் பச்சை கற்பூரத்தை வைக்கவும். சற்று அதிகமாகவே வைப்பது நல்லது.

** அடுத்ததாக ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அதில் பச்சை கற்பூரம் எரியும்போது வெளிப்படும் புகை முழுவதும் தட்டில் படியுமாறு காட்ட வேண்டும்.

**அடுத்ததாக தெற்கு முகமாக நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு வெள்ளை நிற பேப்பர் அல்லது துணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பேப்பர் அல்லது துணியில் உங்களுக்கு யாரெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமோ?? மற்றும் எவ்வளவு பணம் என்பதை தட்டில் படிந்த புகையை உங்களது நடுவிரலால் தொட்டு பணம் கொடுக்க வேண்டியவர்களின் பெயரையும் கொடுக்க வேண்டிய தொகையையும் அந்த துணியில் அல்லது பேப்பரில் எழுதிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நான்காக மடித்து வீட்டில் உள்ள விநாயகர் சிலையின் அடியில் வைக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. ரகசியமான முறையில் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு உரிய பலன் முழுமையாக கிடைக்கும்.

நீங்கள் யாருடைய பெயரை எழுதினீர்களோ அவர்களிடமிருந்து உங்களுக்கு வர வேண்டிய தொகை கூடிய விரைவில் விநாயகர் அருளால் வந்து சேரும். இது ஒரு அற்புதமான பரிகாரம். அதிக செலவில்லாமல் எளிமையான இந்த பரிகாரத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.