உங்கள் குழந்தை அதி புத்திசாலியாக வர வேண்டுமா!! பாலூட்டும் போது கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

Photo of author

By Sakthi

குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து உணவுகள் சாப்பிட்டு வருவார்கள். அதாவது சில உணவுகள் மட்டும் சாப்பிட வேண்டும். சில உணவுகளை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது. இதை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சேராது என்று உணவுகளை வகைப்படுத்தி சாப்பிடுவார்கள்.
ஆனால் உண்மை என்பது என்னவென்றால் தாய்மார்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் நேரடியாக பாலாக மாறி  குழந்தைகளுக்கு செல்வது கிடையாது. அவர்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் மூன்று சத்துக்களாக மாறி பின்னர் தான். பாலாக மாறுகின்றது. அதன். பின்னர் தான் தாய்மார்களின் மார்பகங்கள் மூலமாக பாலாக மாறுகின்றது.
அதாவது தாய்மார்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் செரிமானம் அடைந்து புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என்று பிரிந்து பின்னர் இரத்தத்தில் கலந்து அதன் பின்னர் இந்த சத்துக்கள் பாலாக மாறித்தான் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது.
அதாவது தாய்மார்கள் பிரியாணி சாப்பிட்டாலும் சரி தயிர் சாப்பாடு சாப்பிட்டாலும் சரி. எந்த உணவுகள் சாப்பிட்டாலும் அது முதலில் செரிமானம் அடைகின்றது. அதன் செரிமானம் அடைந்த பின்னர் இந்த உணவுகள் அனைத்தும் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என்று மூன்று சத்துகளாக மாறி கல்லீரலுக்கு செல்கின்றது.
அதன் பின்னர் கல்லீரலில் இருந்து இந்த சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றது. இதையடுத்து இந்த உணவுகள் பாலாக மாறி பின்னர் தான் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது. எனவே எந்த உணவு சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு நேரடியாக உணவாக கிடைக்காது. சத்துக்களாக கிடைப்பதால் எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஆனால் ஒரு சிலர் மாம்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்றால் மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகளவு இருக்கின்றது. இதனால் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அது செரிமானம் ஆகாது. அதனால் தாய்மார்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அது தான் காரணம். எனவே எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகள் அனைத்தையும் தாய்மார்கள் சாப்பிடலாம்.