தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க…

0
99

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க…

நம்மில் பலருக்கும் முடி உதிர்தல், தலைமுடி அடர்த்தியாக இல்லாமல் இருப்பது, கருமையாக இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நாம் பல வகையான சிகிச்சை, தைலம், மருந்துகள், மாத்திரைகள், எண்ணெய்கள் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இவை நமக்கு சிறிதளவு பயனை கொடுத்து அதிகளவு தீமைகளை கொடுத்திருக்கும். இதனால் கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவில் சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* நாட்டு வெந்தயம்
* கற்றாழை
* தேங்காய் எண்ணெய்
* கரிசலாங்கன்னி இலை
* முருங்கை இலை
* செம்பருத்தி இலை
* கருஞ்சீரகம்
* சின்ன வெங்காயம்

செய்முறை…

எண்ணெய் தயாரிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் கற்றாழையை நடுவில் வெட்டி அதில் வெந்தயத்தை கொட்டி மீண்டும் வெட்டிய பகுதியை வைத்து அப்படியே மூடிவிட வேண்டும். இதற்கு ரப்பர் பேண்ட் போட்டுவிட்டால் இது நன்றாக ஊறும். இரண்டு நாட்கள் கழிந்து ரப்பர் பேண்டை எடுத்துவிட்டு கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் வெட்டி வைத்துள்ள கற்றாழையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் செம்பருத்தி இலை, கருஞ்சீரகம், கரிசலாங்கன்னி இலை, ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இது நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இதில் முருங்கை இலை, சின்ன வெங்காயம் இரண்டையும் சிறிது சிறிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மூடிக் கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுவதும் இது நன்கு ஊற வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்னர் இதை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை பயன்படுத்தும் பொழுது முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும். பொடுகுத் தெல்லை நீங்கும். முடி நன்கு அடர்த்தியாக வளரும். கருமையாக மாறும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

Previous articleமுகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டுமா… இதோ அதற்கான சில எளிமையான வழிமுறைகள்…
Next articleகுதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ..