குதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ..

0
24

குதிகாலில் அதிக வெடிப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில எளிய மருத்துவ குறிப்புகள் இதோ..

குதிகாலில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளை நீக்குவதற்கு சில எளிமையான மருத்துவக் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்களுக்கு குதி கால்களில் வெடிப்புகள் ஏற்படும். இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். இந்த வெடிப்புகள் வழியாக கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த வெடிப்பு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இந்த வெடிப்பு பிரச்சனையை சரிசெய்வதற்கு நாம் அதிகம் ஆயில் மெண்ட் பயன்படுத்துவோம். அல்லது சில நாட்டு மருந்து குறிப்புகளை பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தியும் குதிகால்களில் உள்ள வெடிப்பு பிரச்சனை குணமாகவில்லை என்றால் இந்த மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.

குதிகால் வெடிப்புகளை சரி செய்யும் சில மருத்துவ குறிப்புகள்…

* குதிகால் வெடிப்புகளை சரி செய்ய பப்பாளி பழத்தை எடுத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பால் சேர்ந்து குதிகாலில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தோல் ஒன்று சேர்ந்து புதிய தோல் போன்று தோற்றம் அளிக்கும்.

* உருளைக் கிழங்கை நறுக்கி நன்கு வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பின்னர் இந்த உருளைக் கிழங்கு பொடியை தண்ணீரில் கலந்து பாதத்தில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும்.

* பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க இரண்டு டீஸ்பூன் அரிசி மாவில் சிறிதளவு தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து அதை பாதத்தில் தடவினால் போதும்.

* கையளவு வேப்பிலையை எடுத்து அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கால்களை சூடான தண்ணீரில் கால்களை ஊற வைத்து பின்னர் வேப்பிலை மற்றும் சுண்ணாம்பு கலவையை பாதத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழிந்து பாதத்தை தேய்த்து விட்டு கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால் பாதம் மிருதுவாக வெடிப்புகள் இன்றி காணப்படும்.

* வெந்தயக் கீரையை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கடுகு எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை பாதத்தில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பாத வெடிப்புகள் சரியாகும்.

* வாழைப்பழத்தை எடுத்து மசித்து அதை பாதங்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பாத வெடிப்புகள் மறையும். மேலும் பாதத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.