கடுமையான வெயிலால் சருமம் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகிறது.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள அரிசி மாவு பேஸ்பேக் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)அரிசி மாவு – இரண்டு தேக்கரண்டி
2)தயிர் – ஒரு தேக்கரண்டி
3)தக்காளி – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் பச்சரிசி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரிசி பொடியை கிண்ணத்திற்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பசுந்தயிரை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை அரிசி பேஸ்ட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நான்றாக கலந்து சருமத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தோல் கருமை நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)முல்தானி மெட்டி – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கற்றாழை பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இதை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்து குளித்தால் வெயில் கருமை நீங்கிவிடும்.