இந்த டாக்டர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள்
நாளுக்கு நாள் பெருகி வரும் உடல் உபாதைகள் அதிகம். அதற்கு முக்கிய காரணியாக விளைவது நாம் உண்ணும் உணவு பொருட்களும், நம் உணவு பழக்கங்களுமே.
எவ்வாறு உண்பது? எதை உண்பது? எதைத் உண்டால் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இந்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
1. மைதாவில் சமைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதுவுமே வேண்டாம். மைதா வேண்டாம். பிஸ்கட் பிரட் பரோட்டா இதில் சத்துக்கள் இல்லை என்பதால் மட்டுமே அதை அவர் கூறவில்லை. அது விஷம் தான் உள்ளது என்பதை கூறுகிறார்.
2. சாக்லெட் வேண்டாம். குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்கவும் என்று கூறுகிறார். அப்படியே வாங்கி கொடுக்க நினைத்தால் கடலை மிட்டாயில் மிட்டாய் என்று சத்தான பொருட்களை வாங்கிக் கொடுக்கவும் என கூறுகிறார்.
3. Burger, Pizza போன்றவற்றை தவிர்க்கவும்.
4. கோதுமையை வாங்கி தனியாக அரைத்து பயன்படுத்த வேண்டும். கடைகளில் விற்கும் கோதுமை மாவில் சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு gluten என்ற வேதிப்பொருள் சேர்கிறார்கள்.
5. அதிகமாக பழங்கள் கொய்யா, வாழை, திராட்சை ஆகியவை சாப்பிடுங்கள் என கூறுகிறார்.
6. உடல் எடையை குறைக்க cornFlakes, Oats எல்லாம் வேண்டாம். கம்பு, திணை, கேழ்வரகு, வரகு சாமை பயன்படுத்தவும்.
7. சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டும். வெல்லம், கருப்பட்டி, தேன் சேர்த்து பருகலாம்.
எனவே அனைத்தையும் குழந்தைகளுக்கு தருகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளாமல் சத்தான உணவுகளை குழந்தைக்கு குடுத்து அவர்கள் வாழ்வில் நோயின்றி வாழ உதவ வேண்டியது உங்களது கடமை என மருத்துவர் கூறுகிறார்.