வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்! எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. தற்பொழுது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் மக்கள் செலுத்திக் கொள்ள மிகவும் தயக்கம் அடைந்தனர். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய பின்புதான் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். இன்னிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்களுக்கு தான் அதில் பெரும் பங்கு உள்ளது.
தொற்று ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற முயற்சியில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் மருத்துவர்கள் எனக் கூறினார். இந்நிலையில் சில மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு கூடுதல் வேலை சுமத்த படுவதாகவும் பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகாரையடுத்து விசாரித்துப் பார்த்ததில் தன் பணியை செய்யாமல் இருப்பவர்கள் தான் இவ்வாறு கூறி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது தன் வேலையை செய்யாமல் இதுபோல புகார்களை இணையதளத்தில் பரப்பி வருவது தான் அவர்களது வேலை என்று கூறினார்.
மேலும் அவ்வாறு பரப்புவோர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது என்னவென்றால், அவதூறு செய்தியை பரப்புபவர்களே, இன்னும் ஒரு மாதம் மட்டும் தன் வேலையை ஒழுங்காக செய்பவர்களை விட்டு விடுங்கள். ஏனென்றால் பல மருத்துவர்களும் , செவிலியர்களும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பெருமளவு தங்களது உழைப்பை ஈட்டி வருகின்றனர். அவர்களின் வேலையை கெடுப்பதற்காக இவ்வாறான அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இது போன்று தன் வேலையை செய்யாமல் அவதூறு புகார் பரப்புபவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஆர்டர் போடும் அமைச்சர்களாக நாங்கள் இல்லை. தொற்று அதிக வீரியத்தில் இருந்தபோதும் நாங்கள் மருத்துவமனைகளுக்கும் மலை கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் நிலையை கேட்டு அறிந்தோம் இன்று தெரிவித்தார்.