அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: அவசர சிகிச்சைக்கு வந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!!

Photo of author

By Vijay

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது தலியா நஹலா  கிராமத்தை சேர்ந்தவர் நசீம். அவரது மகள் சோபியா (வயது 5) கடந்த புதன்கிழமை கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். நசீம் அன்று மதியம் மகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பதாவுன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதற்கிடையே கடும் காய்ச்சலால் துடுதுடித்து சிறுமி பரிதாபமாக  மருத்துவ வளாகத்தில் இறந்தார்.

அதன் பின்னர்தான் தெரிந்தது பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கிரிகெட் விளையடிக்கொண்டி இருந்தனர். மேலும் இதை பார்த்த சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினமே மருத்துவ கல்லூரி நிர்வாகம் 3 பேர் கொன்ட குழுவை விசாரணைக்காக அமைத்து உத்தரவிட்டது. அந்த குழு முழு விசாரணையில் பணியில் இருந்த மருத்துவர்கள் கிரிகெட் விளையாடியது உறுதியானது.

மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்தது. அதில் ஒப்பந்த மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு. மேலும் அரசு மருத்துவர்கள் 2 பேர் ஒரு மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவுவிட்டது. டாக்டர்களின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.