இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்
2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் 59 ஆயிரம் கோடி செலவில் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில் இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி பாதுகாப்பு படையை மேலும் வலுப்படுத்த விமானம் வாங்க அரசு முடிவு செய்தது.அதில் 5 விமானம் தற்போது இந்தியாவை இந்த அடைவதாக இருக்கிறது.
இந்தியா ரஷ்யா பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுமே நட்பு நாடுகள் என்றே கூறலாம்.தற்போது
ரஷ்யாவை பொருத்தமட்டில் இந்தியா பக்கமும் இல்லாமல் சீனாவின் பக்கமும் இல்லாமல் இரு நாட்டிற்கும் நட்பு நாடாகவே இருக்கும் மனப்பான்மையில் உள்ளது. ஆனால் பிரான்ஸ் எனக்கு சீனாவின் நட்பு தேவை இல்லை இந்தியாவின் நட்பே போதும் அவர்களுக்கு தங்களது ஆயுதத்தை விற்றால் போதும் என்ற மனபான்மைக்கு வந்து விட்டனர்.இந்திய சீன எல்லைப் பிரச்சனை துவங்கும்போது முதல் நாடாக இந்தியாவிற்கு சப்போர்ட் செய்தது பிரண்ட்ஸ் தான்.இதுமட்டுமின்றி சீன நீங்கள் செய்வது மிகவும் தவறானது நாங்கள் இந்தியாவின் பக்கம்தான் நிற்போம் தேவை என்றால் எங்கள் ராணுவத்தையும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்போம் என்று வாக்குறுதி அளித்தது.அதேபோன்றுதான் அக்டோபர் மாதம் டெலிவரி செய்யவேண்டிய ரஃபேல் விமானத்தை நாங்கள் முன்னதாகவே தருகிறோம் என்றும் வாக்குறுதி அளித்தது.
இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட இந்த ஒப்பந்தத்தின்படி 3 வருடத்திற்குள் 36 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.அதாவது முதல் வருடத்தில் எந்த மாதம் எத்தனை விமானங்கள் ஒப்படைக்கப்படுகிறது அடுத்த இரண்டு வருடத்தில் அந்த மாதத்தில் மீதமிருக்கும் விமானங்கள் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.இந்த ஒப்பந்தத்தின் படி இந்த வருடம் 12 விமானங்கள் அக்டோபர் மாதம் வழங்ககுவதாக இருந்தது. ஆனால் தற்போது சீன பாகிஸ்தான் எல்லை பிரச்சினைகாகத் 12 விமானத்தில் 5 விமானங்கள் முன்னதாகவே இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ரஃபேல் விமானம் ஜூலை 27ஆம் தேதி பிரான்சில் இருந்து புறப்பட்டு இன்று இந்தியாவை வந்தடைகிறது.
இந்தியாவிற்கு வர இருக்கும் இந்த ஐந்து விமானங்களும் Indian specific enhancement (ISE) முறைப்படி அதாவது இந்தியாவின் காலநிலைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்தியாவிற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலிருந்து கொண்டுவரப்படும் இந்த ரஃபேல் விமானம் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான நிலையத்தில் தரையிறக்க படுவதாக உள்ளது.இந்த அம்பாலா விமான நிலையத்தில் நிறுத்தப்படுதற்கான காரணம் இந்த அம்பாலா விமான நிலையமானது சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் ஒரே இடைவெளியில் உள்ளது.இதனால் இத்தளத்தில் தரையிறக்கினால் ஒரே இடத்திலிருந்து இரண்டு நாடுகளை தாக்க முடியும் என்பதனால் அந்த விமான நிலையத்தில் தரையிறக்க உள்ளார்கள்.
இது சீனா மற்றும் பாகிஸ்தான்நாடுகளுக்கு மிகப்பெரிய மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது ஏனெனில் ரஃபேல் விமானத்தை அழிக்குமளவிற்க்கு இன்னும் வேறு எந்த டெக்னாலஜியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த ரஃபேல் விமானத்தினால் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை சரியாக தாக்கும் வல்லமை பெற்றது. ஒளியின் திசைவேகத்தை விட நான்கு மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கும். இதுபோன்ற ஏராளமான சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது இந்த ராஃபேல் விமானம்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ரபேல் விமானம் இந்திய விமானப்படையில் தேவை என்றால் இன்னும் இரண்டு வாரங்களில் சேர்க்கப்படும்.
இல்லையென்றால் இந்திய விமானிகளுக்கு அனைத்து விதமான ட்ரெயினிங் கொடுத்து ஆறு மாதத்திற்கு பிறகு விமான படையில் சேர்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த ராஃபேல் விமானத்தை பற்றி மக்களிடையே எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.