கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா:? தூள்கிளப்பும் கழுதைகறி வியாபாரம்!

0
165

கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா:?
தூள்கிளப்பும் கழுதைகறி வியாபாரம்!

சட்டவிரோதமாக கழுதைகறி விற்றவர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் இது போன்ற வனவிலங்குகளை கொன்று கறியை விற்றலோ அல்லது வாங்கினாலோ ஐந்தாண்டுகள் சிறை தண்டனை என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை கறி விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர்,
அம்மாவட்டத்தில் நான்கு இடங்களில் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

சோதனையில் கழுதை கறி விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.வேடப்பாலத்தில் 1 இடத்திலும்,சிராலா பகுதியில் 1 இடத்திலும்,உசிலி பேட்டையில் 2 இடத்திலும் என மொத்தம் 4 இடங்களில் கழுதை கறி விற்பனை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.மேலும் ஒரு கிலோ கழுதை கறி 600 ரூபாய்க்கு விற்பனையானதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கழுதை கறியை விற்ற 11 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு சுமார் 400 கிலோ கழுதை கறியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கழுதை போன்ற வன விலங்குகளை வெட்டியறுத்து விற்பனை செய்வது சட்ட விரோதமான செயல் என்றும் விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் மீது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பாயும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதைக் குறித்து விசாரித்த போது கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை கூடும், வலிமை அதிகரிக்கும்,மிகச்சத்தானது என்று கூறி பொதுமக்கள் பலரும் இந்த கறியை அதிகம் வாங்கி சாப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Previous articleரயில்முன் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை:! ஒருதலைக் காதலால் ஏற்பட்ட கொடூர விபரீதம்!
Next articleசேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்!