முட்டை என்றாலே அதில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பரவி வரக்கூடிய கருத்துக்கள் தான் நமது நினைவிற்கு வரும். மருத்துவர்களும் மஞ்சள் கரு மற்றும் முட்டையை டயபடிக், கொலஸ்ட்ரால், உடலில் ஸ்டோன் இருப்பவர்கள் உண்ணக்கூடாது என்று கூறி வருகின்றனர். முட்டையை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை விட ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்பதை தற்போது காண்போம்.
ஒரு முழு முட்டையை நாம் உண்ணும் பொழுது தோராயமாக அதில் 60 கலோரிகள் எனர்ஜி நமக்கு கிடைக்கும். அதேபோன்று ஆறு கிராம் ஹை குவாலிட்டி புரோட்டின் ஒரு முழு முட்டையில் உள்ளது.5-6 கிராம் கொழுப்பு ஒரு முழு முட்டையில் உள்ளது. இதில் நிறைகொழுப்புகள் 1.50 கிராமும் மீதம் உள்ள கொழுப்புகள் நல்ல கொழுப்புகளாகவும் உள்ளது.180-200 மில்லி கிராம் அளவிற்கு கொலஸ்ட்ரால் இருக்கும்.
1970 களில் ஒரு நாளைக்கு நாம் உண்ணக்கூடிய உணவுகளின் மூலம் 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே நாம் உண்ண வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருந்தது. ஆனால் தற்போது நாம் ஒரு நாளைக்கு ஒரு முட்டை, பால் மற்றும் பலவிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரித்து விடுகிறது.
ஆனால் நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 மில்லி கிராம் வரை கொலஸ்ட்ரால் அளவினை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் யாரும் அந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆரம்பத்தில் உணவில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் ஆனது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும் எனவும் இதனால் இதய நோய்கள் உருவாகும் எனவும் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டதன் அடிப்படையில் நாம் உண்ணக்கூடிய உணவில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை பெரிதும் அதிகரிக்காது என நிரூபிக்கப்பட்டது.
இவ்வாறு நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து நமக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை என்றால், எதிலிருந்து நமக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் நமது உடலில் உள்ள கல்லீரல் ஆனது ENDOGENOUS PRODUCTION என்பதன் மூலமும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2020 களில் முட்டை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுமா? என்ற ஆராய்ச்சிக்கான முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வதனால் மாரடைப்பு, இருதய நோய் மற்றும் இது சம்பந்தமான எந்த வித நோய்களும் ஏற்படாது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.