இந்த நோய் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

இந்த நோய் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Parthipan K

Does Shruti Haasan also have this disease? Fans shocked!

 இந்த நோய் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி. ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார்.பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

தற்போது இவர் மும்பையில் நிரந்தரமாக தங்கி விட்டார். மேலும் இவர் பூனையுடன் விளையாட்டு  வீடியோக்கள் மற்றும் அடிக்கடி சமையல் செய்தும், போட்டோ சூட் செய்தும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் தனது சமூக வலைதளங்களில் கூறியிருந்தார்.

இந்த நோயானது பெண்களிடம் உண்டாகும் ஹார்மோன் கோளாறு. இந்த பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்வார்கள். மேலும் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த  பிரச்சனைகள் அனைத்தும் தற்போது  சுருதிஹாசன் எதிர்கொண்டு வருவதாகவும் இதை அனைவருடன் ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என தனது  உடற்பயிற்சி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.