Cinema: இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவின் தற்போதைய நடிப்பானது அனைவரையும் கவர வைக்கிறது. அவருக்கு கொடுக்கும் ஒவ்வொரு ரோலையும் தனித்துவம் காட்டும் வகையில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று காதல்கள் இருந்த நிலையில் மூன்றும் தோல்வி அடைந்து விட்டது என்று ஒரு நிகழ்ச்சியில் இவரே கூறியிருப்பார். அப்படி இருக்கையில் அவார்ட் ஷோ ஒன்று இவரிடம் கோபிநாத் ஒரு சில கேள்விகளை கேட்டிருப்பார்.
அதில், நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக உள்ளீர்கள் என்று கேட்டார்?? தற்போது வரை நான் காத்து வந்த சுதந்திரம் ஒருபோதும் பறிபோகவில்லை, நான் சென்றடைய வேண்டும் என்ற இலக்கானது இன்னும் அடையவில்லை என தெரிவித்தார். அந்த இலக்கு தான் என்ன என்று கோபிநாத் கேட்கையில், ஒரு சில நொடி மௌனம் கொண்ட எஸ் ஜே சூர்யா, நான் நினைப்பது நடக்கலாம், நடக்காமலும் போகலாம் ஆனால் நடந்தாலும் மகிழ்ச்சி, நடக்க விட்டாலும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
அப்படி என்னதான் நீங்கள் உங்கள் கோலாக நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, நான் இந்தியாவுக்கே எம்ஜிஆர் ஆக வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு அவர் கூறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அரங்கமே மிக கரகோஷத்துடன் அவர் கூறிய பதிலை வரவேர்த்தது. அதாவது ஒரு தமிழனாக என்னை இந்தியா முழுவதும் பேச வேண்டும். நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். எம்ஜிஆர் புகைப்படத்தை பார்த்தால் கூட புகழ்வார்கள், திரையில் வந்தால் விசில் சத்தம் பறக்கும் என தெரிவித்தார்.
நீங்கள் ஏன் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை மீண்டும் படம் எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்?? நான் இசையமைக்க கற்றுக் கொண்டது, படம் இயக்க கற்றுக் கொண்டது அனைத்தும் ஹீரோவாக என்னை மாற்றியது. நடிகனாக உருவாக வேண்டும் என்பது பெரிய ஆசை, நான் தயாரித்த படங்களை வைத்து மீண்டும் இயக்குனர் ஆவேனா என பல பேர் கேட்கின்றனர்,அந்த நபரை எனக்கு வேலைக்காரனாக வைத்துள்ளேன்.
எம்ஜிஆர் போல் ஏன் ஆக வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளித்தார். பாலிவுட்டில் ஷாருக்கான் தான் டாப் ஹீரோ, அவரின் படம் தமிழ் தெலுங்கு திரையுலகில் வெளியானாலும் மக்கள் எதிர்பார்ப்பானது குறைவுதான். இதுவே உலகம் அறியும் ஒரு ஸ்டார் இருந்தால் அவரின் பிசினஸ் இந்திய அளவில் விரிவடையும். இவ்வாறு அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.