நாம் உட்கொள்ளும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சுவை உப்பு.இந்த உப்பின் சுவை குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் உணவின் சுவையே மொத்தமாக மாறிவிடும்.சிலர் நன்றாக சமைத்தாலும் அவர்களுக்கு உப்பு அளவு மட்டும் சரியாக போட தெரியாமல் சில நேரம் அதிகமாக கொட்டிவிடுவார்கள்.இப்படி உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் பதட்டம் அடையாமல் அதை குறைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள் போதும்.
டிப் 01:
உணவு சமைக்கும் போது தெரியாமல் அதிக உப்பு சேர்த்துவிட்டால் அதை குறைக்க உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்.ஒரு சிறிய அளவு உருளைக்கிழங்கை நறுக்கி குழம்பில் சேர்த்து உப்பு குறைந்துவிடும்.
டிப் 02:
தயிர் பச்சடி,மோரில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் தயிர் இல்லாத பட்சத்தில் பிரஸ் க்ரீம் சேர்க்கலாம்.அல்லது மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்தால் உப்பு சுவை கட்டுப்படும்.
டிப் 03:
குழம்பில் உப்பு சுவை அதிகரித்துவிட்டால் அதை குறைக்க எலுமிச்சை சாறு பிழிந்துவிடலாம்.எலுமிச்சையின் புளிப்பு சுவை உப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.எலுமிச்சை சாறுக்கு பதில் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.
டிப் 04:
கொதிக்கும் குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் அதை குறைக்க மாவு உருண்டை பயன்படுத்தலாம்.கொதிக்கும் பொழுது மாவு உருண்டை போட வேண்டும்.பிறகு குழம்பை இறக்கம் போது அந்த உருண்டையை எடுத்துவிட வேண்டும்.
படி 05:
சூப் வகைகள்,குழம்புகளில் உப்பு சுவை அதிகரித்துவிட்டால் அதை குறைக்க மேலும் சிறிது தண்ணீர் சேர்த்தால் போதும்.
டிப் 06:
இட்லி,தோசை செய்யும் அரிசி மாவில் உப்பு அதிகமாகிவிட்டால் அதை எப்படி குறைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள்.வெள்ளை ரவையை வாணலியில் போட்டு வறுத்து சிறிது பாலில் ஊறவைத்து மாவில் கலந்தால் உப்பு சுவை குறைந்துவிடும்.