Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

Photo of author

By Divya

Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

Divya

இன்று பலரது வீடுகளில் வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.கை வலிக்கும் அளவிற்கு துணி துவைத்த காலம் போய்விட்டது.தற்பொழுது வாஷிங் மெஷினில் துணிகளை போட்டால் சிறிது நேரத்தில் துணியில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு அலசி சுத்தமாகிவிடுகிறது.இதனால் வாஷிங் மெஷின் பயன்பாடு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

புதிதாக வாங்கும் பொழுது வாஷிங் மெஷினில் போடும் துணிகள் நன்றாக அழுக்கு போகும்.ஆனால் மாதங்கள் ஆகும் போது துணிகளில் அழுக்கு ஆங்காங்கே காணப்படுகிறது.இதற்கு காரணம் வாஷிங் மெஷின் என்று நினைத்தால் தவறு.நாம் செய்யும் சில அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணமாகும்.

வாஷிங் மெஷின் வாங்கும் போது அதன் பராமரிப்பை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நமது நேரத்தையும்,வேலையையும் மிச்சப்படுத்தும் வாஷிங் மெஷினை நாம் முறையாக பராமரித்து வந்தால் மட்டுமே அவை நீண்ட வருடங்கள் உழைக்கும்.

வாஷிங் மெஷின் பராமரிப்பு:

டாப் லோடட் வாஷிங் மெஷின் எடுத்துக் கொண்டால் அதில் உடைகளை துவைக்கும் பகுதியில் காணப்படும் ஸ்பின்னில் சுற்றும் வளையத்தின் அடிப்பகுதியில் அதிகளவு அழுக்குகள் தேங்கி இருக்கும்.நம் உடைகளில் உள்ள மண்,அழுக்கு,தூசு போன்றவை அங்கு போய் சேர்ந்துவிடும்.

இந்த வளையத்தை ஸ்க்ரூ கொண்டு கழட்டி பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் மற்ற மாடல் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பகுதியின் ஓரத்தில் அழுக்குகள் தேங்கி இருக்கும்.இதை கழட்டி முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு வாஷிங் மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குழாய்களை கழட்டிவிட்டு பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாஷிங் மெஷினில் போடும் துணி அழுக்கு இல்லாமல் துவைக்கப்படும்.அதேபோல் வாஷிங் மெஷினை முறையாக பராமரித்து வந்தால் நீண்ட காலம் உழைக்கும்.வாஷிங் மெஷினில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய பிறகே பயன்படுத்த வேண்டும்.