சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!! 

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!! 

நம்மில் சிலருக்கு சருமம் வந்து முழு ஆரோக்கியமாக ஈரப்பதத்துடன் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு சருமம் வறண்டு காணப்படும். இந்த வறண்ட சருமத்தை சரி செய்ய ஒரு மருத்துவரிடம் சென்று பணத்தை வீண் செய்வார்கள். செயற்கையான மற்றும் கெமிக்கல் நிறைந்த மருந்து பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும் நம்முடைய சருமத்தை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது எப்படி என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்… 

* காபித்தூள்

* தேன்

* சந்தனம்

செய்முறை… 

வறண்ட சருமத்தை ஈரப்பதமாக மாற்றக் கூடிய இயற்கையான மருந்தை தயார் செய்வது மிகவும் எளிமையான ஒரு செய்முறையாகும். ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் காபித் தூள் சேர்க்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் சந்தனம் சேர்க்கவும். பின்னர் இதில் இறுதியாக ஒரு ஸ்பூன் தேன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின்னர். இந்த கலவையை நம்முடைய சருமத்தில் தேய்த்துக் கொண்டு நம்முடைய கைகளை வைத்து 10 நிமிடங்கள். ஸ்கிரீன் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழிந்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் சரியாகி ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும்.