Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

Photo of author

By Kowsalya

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

நாம் தூங்கும் பொழுது அனைவருக்கும் கனவு வரும். ஆனால் அந்தக் கனவிற்கு என்ன பலன் என்பது தான் அறியாத ஒன்று. ஒரு சிலருக்கு வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்பே கனவுகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

1. கோவில் பற்றிய கனவுகள் வந்தாலே அது நன்மை தரக்கூடிய கனவுகள் தான். கனவில் கோவிலில் அடிக்கக்கூடிய மணியின் ஓசை உங்கள் காதில் கேட்டால் தீராத பிரச்சினைகள் தீர போகின்றது என்று அர்த்தம். நல்ல வேலை கிடைத்தும் வருமானம் அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம். திருமணயோகம் இல்லாதவர்களுக்கு திருமண பாக்கியம். குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கும்.

2. கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியை காணப் போகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்கு முன் கடவுள் உங்களை சோதித்து பல கஷ்டங்களை தந்தே பின்னர் நல்ல பலன்களை தந்தருள்வார்.

3. சிவபெருமான் உங்களது கனவில்வந்தால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று அர்த்தமாம். ஆன்மீகத்தில் உங்களுக்கான தேடலில் அவர் உங்களைக் கொண்டு செல்வார் என்பது அர்த்தமாம்.

அதேபோல் எக்காரணத்தை கொண்டும் பாழடைந்த கோவிலோ அல்லது கடவுளே இல்லாத மூலஸ்தானமும் உங்கள் கனவுகள் இருந்தால் பெரும் துயரம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். அதனுடைய துன்பங்களில் இருந்து காத்துக் கொள்ள உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

4. ஆடை ஆபரணங்களோடு இறைவன் உங்கள் முன் காட்சியளித்த படி கனவுவந்தால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது என்று அர்த்தம். பெருமாளுடன் லட்சுமியோ அல்லது குபேரரோ அல்லது அழகன் முருகனோ உங்கள் கனவில் வந்தால் நீங்கள் பண மழையில் நனைவதற்கு வாய்ப்பு உண்டு.

5. உங்களுடைய உறவினர்களோ அல்லது பெற்றோர்களோ இறந்து போய் இருந்து உங்கள் கனவில் வந்தால் எதிர்காலத்தில் பிரச்சனை நடக்கப் போகிறது என்று உணர்த்தும் வகையில் இந்த கனவுகள் வரும். அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு முயற்சியிலும் இறங்கக் கூடாது அதேபோல் வண்டி வாகனத்தை கவனமாக கையாள வேண்டும்.

6. உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவில் வந்தால் பிரச்சனைகள் தீர போகின்றது என்று அர்த்தம். இந்த நபர் வருகிறாரோ அவரின் கஷ்டங்களும் தீரும் வாய்ப்பு உண்டு.