சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்! 

Photo of author

By Selvarani

சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்!

சிறுநீர் வெளியேற்றத்தின் போது சில நேரங்களில் அதிக துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுகிறது. அதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.

உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை சில நேரங்களில் அதிகப்படியான உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.

டீ மற்றும் காஃபியிலிருக்கும் கஃபைன் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படக்கூடியது. அதிகமாக இவற்றைக் குடிக்கும் போது உடலிலிருக்கும் நீர் சிறுநீராக வெளியேற உடல் டிஹைட்ரேட்டாகும் இதனால் மீண்டும் சிறுநீர் துர்நாற்றமெடுக்கும்.

வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை அதிகமாக சேர்ப்பதன் மூலமாக கூட சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மீன் அதிகம் உண்பதாலும் சிறுநீரகத்தில் துர்நாற்றம் அதிகரிக்கலாம்.

சில நேரங்களில் நீங்கள் உண்ணும் உணவு மற்றும் மருந்துகளின் அடிப்படையிலும் கூட சிறுநீரின் நிறம் மாறலாம். மருந்து உண்ணுவதை நிறுத்தியவுடன் சிறுநீரின் நிறமும் இயல்பு நிலைக்கு மாறலாம்.

ஒரு கடுமையான நோய் இல்லை என்றாலும் இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். ஏனெனில் துர்நாற்றம் வீசும் சிறுநீர் பல நாட்களுக்கு உங்களுக்கு வருகிறது எனில் இதுக்குறித்து நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.