ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டுகிறதா!! இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

0
286
#image_title

ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டுகிறதா!! இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

 

நம்மில் பலருக்கு ஹெல்மெட் போடுவதால் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கின்றது. இந்த ஹெல்மெட்டை சிலர் எவ்வாறு அணிவது என்று தெரியாமலே அணிகின்றனர் இதானால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த ஹெல்மெட்டை எப்படி சரியாக அணிந்து இந்த முடி உதிர்தல் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவில் காணலாம்.

 

ஹெல்மெட் அணிவதால் நம் தலைமுடி மெதுவாக பின்னோக்கி இழுக்கப்படுகின்றது. இதனால் தலை முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் கிடைத்த ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணியாமல் நம் தலைக்கு எந்த ஹெல்மெட் சரியாக இருக்குமோ அதை வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.

 

ஹெல்மெட் அணியும் பொழுது அப்படியே வெறும் தலையில் அணியக்கூடாது. நம் தலையை கைக்குட்டை அல்லது காட்டன் துணியால் மறைத்து பிறகு ஹெல்மட் அணிய வேண்டும்.

 

உங்கள் வீட்டில் இரண்டு ஹெல்மெட் இருந்தால் மாற்றி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு மாற்றி பயன்படுத்தும் பொழுது பொடுகுத் தொல்லை ஏற்படும். அதனால் ஹெல்மெட்டை மாற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 

ஹெல்மெட் அணியும் முன்பு கண்டிப்பாக காட்டன் துணியை தலையில் கட்டி பிறகு ஹெல்மெட் அணிய வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தலையில் ஏற்படும் வியர்வை அந்த காட்டன் துணியில் படிந்து விடும். இதனால் நம் தலைக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகள் தடுக்கப்படுகின்றது.

 

பொடுகுத் தொல்லையை நீக்க வாரத்திற்கு மூன்று முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து விட்டு தலைக்கு மசாஜ் செய்து விடுவதால் தலையில் இரத்த ஓட்டம் சரியாக இருக்கும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் முடி அடர்த்தியாக வளரும்.

Previous articleதைராய்டில் இருந்து விடுபட இதை ஒரு முறை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 
Next articleசுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!!