அடிக்கடி உங்கள் முகம் சிவந்து எரிச்சலாகி விடுகிறதா? இவ்வாறு செய்யுங்கள்.. உடனே க்யூராகிவிடும்!!
உங்களில் சிலருக்கு முகத்தில் அரிப்பு,எரிச்சல்,சிவந்து போதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும்.இதனால் முக அழகு குறைவதோடு தேவையில்லாத சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.எனவே முகத்தில் அரிப்பு,எரிச்சல்,சிவந்து போதல் உள்ளிட்டபாதிப்புகள் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து முயற்சிக்கவும்.
1)கற்றாழை ஜெல்
ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லை முகம் முழுவதும் அப்ளை செய்து வந்தால் முகம் சிவந்து போதல்,எரிச்சல் உணர்வு ஆகியவை சரியாகும்.
2)ஓட்ஸ் மாஸ்க்
ஒரு தேக்கரண்டி ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து வந்தால் முகம் சிவந்து போதல்,எரிச்சல் உணர்வு ஆகியவை சரியாகும்.
3)வெள்ளரிக்காய் பேஸ்ட்
ஒரு வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி குளித்து வந்தால் சிவந்து போதல்,அரிப்பு,எரிச்சல் உணர்வு முழுமையாக குணமாகும்.
4)தயிர் + மஞ்சள்
ஒரு தேக்கரண்டி கெட்டி தயிரில் சிறிது மஞ்சள் சேர்த்து முகம் முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் வாஷ் செய்து வந்தால் சருமம் மென்மையாக மாறும்.சருமத்தில் அரிப்பு,எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.
5)தேன் + கஸ்தூரி மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 25 கிராம் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சிறிது தூயத் தேன் சேர்த்து பேஸ்டாக்கி முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் அரிப்பு,எரிச்சல்,சிவந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
6)ஐஸ்கட்டி
ஒரு துண்டு ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துணியில் வைத்து முகம் முழுவதும் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் எரிச்சல்,சிவந்து போதல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.