முடி உதிர்வை கட்டுப்படுத்தி நல்ல முடி வளர்ச்சியை பெற இந்த மூலிகை எண்ணைய் தயாரித்து தலைக்கு தடவுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
2)பெரிய நெல்லிக்காய் – நான்கு
3)விளக்கெண்ணெய் – 150 மில்லி
4)ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி
5)கறிவேப்பிலை கொத்து – இரண்டு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 150 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 50 மில்லி ஆலிவ் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடுபடுத்த வேண்டும்.பின்னர் நான்கு பெரிய நெல்லிக்காயை சின்ன துண்டுகளாக வெட்டி எண்ணையில் போட வேண்டும்.
பின்னர் இரண்டு கொத்து கறிவேப்பிலையை நறுக்கி எண்ணையில் போட்டு அடுப்பு தீயை குறைவாக வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணையை ஆறவைக்க வேண்டும்.
பிறகு இதை பாட்டில் ஒன்றிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
2)சின்ன வெங்காயம் – நான்கு
செய்முறை விளக்கம்:-
முதலில் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த வெங்காய எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவினால் அவை முடி உதிர்வை தடுக்கும்.
அதேபோல் தேங்காய் எண்ணையில் வெந்தயம்,கற்றாழை போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.