உங்கள் மொபைல் போனில் சீக்கிரம் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிடுகிறதா.. சூடாகி விடுகிறதா!!கேமராவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

Photo of author

By Janani

இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே மொபைல் போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகி விடுவது, சிறிது நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் போன் சூடாகி விடுவது மற்றும் சார்ஜ் விரைவில் குறைவது போன்ற பிரச்சனைகள் தான். எதனால் இப்படி நடக்கிறது என்று பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது அதனை பற்றி தான் தற்போது காணப் போகிறோம்.
நமது மொபைல் போனில் வீடியோ எடுக்கும் பொழுது அதில் உள்ள video resolution 4k மற்றும் 3k என வைத்திருக்காமல் 1080p,720p எனவும் 60 frame இல்லாமல் 30 fram பயன்படுத்துவது போன்றவை நமது மொபைல் போனில் சார்ஜ் குறையாமலும், சூடாகாமலும் இருக்கும்.
நாம் ஒரு வீடியோவை ரெக்கார்ட் செய்யும் பொழுது அதில் எது தேவையோ அதனை மட்டும் கட் செய்து ரெக்கார்ட் செய்தால் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகாமல் இருக்கும்.
ஒரு சில ஃபோன்கள் சிறிது நேரம் வீடியோவை எடுத்தாலே சூடாகி விடுகிறது அதிலும் வெயிலில் நின்று கொண்டு வீடியோ எடுத்தால் இன்னும் சூடாகி விடும். எனவே நிழலில் நின்று வீடியோக்களை எடுக்க வேண்டும்.
மொபைல் போனை பயன்படுத்தி நிறைய நேரம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன் கூட்டியே ஆலோசித்து பவர் பேங்க் மற்றும் பென்டிரைவ் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மொபைல் போனில் சார்ஜ் குறைந்தாலும் பவர் பேங்க் ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டோரேஜ் ஃபுல் ஆனாலும் பென் டிரைவில் மாற்றிக் கொள்ளலாம்.
மொபைல் போனில் போட்டோ எடுக்கும் பொழுது கை நடுக்கம் என்பது பலருக்கும் ஏற்படும். அவ்வாறு போட்டோ எடுக்கும் பொழுது கை நடுக்கத்தால் போட்டோ நன்றாக வரவில்லை என்றால் stable shot,ultra steady,steady shot என ஒவ்வொரு போனிலும் ஒவ்வொரு ஆப்ஷன்கள் இருக்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்பொழுதும் போட்டோ நன்றாக வரவில்லை என்றால் Google photos என்ற app மூலம் எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
ரொம்ப நேரம் எடுக்கக்கூடிய ஒரு வீடியோவை சுருக்கி சிறியதாகவும் விரைவாகவும் காட்டக்கூடிய ஆப்தான் Time Lapes. இதனை பயன்படுத்தி மக்கள் அதிகமாக சென்று வரக்கூடிய ஒரு இடம், வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலை, மேகம் நகர்வது போன்றவற்றை அழகாக எடுக்கலாம். ஆனால் Time Lapse பயன்படுத்தும்போது ஃபோனானது ஆடாமல் ஒரே இடத்தில் ஃபிக்ஸ் செய்து இருக்க வேண்டும்.
நாம் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் பொழுது ஒன்று முன்புற கேமராவில் எடுப்போம் இல்லையென்றால் பின்புற கேமராவில் எடுப்போம். ஆனால் இரண்டு கேமராவையும் பயன்படுத்தி வீடியோ எடுக்க வேண்டும் என்றால் Dual Camera என்ற ஆப்பை பயன்படுத்தி எடுக்கலாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் பலர் அறிந்திருப்பர்.. எனினும் அறியாதவர் இதனை பயன்படுத்தி பார்க்கலாம்.