தலையணையில் படுத்து தூங்கும் போது கழுத்து வலிக்கிறதா? உங்களுக்கு ஏற்ற தலையயணையை எப்படி தேர்வு செய்வது?

Photo of author

By Rupa

மனிதர்கள் அனைவருக்கும் உறக்கம் என்பது இன்றியமையாதவையாகும்.உடல் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் முக்கியான ஒன்று.ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலானோர் உறக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.

உறக்கமின்மையால் மன அழுத்தம்,முடி உதிர்தல்,உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இதை சாதாரண விஷயம் என்று அலட்சியப் படுத்தினால் நாளடைவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நிம்மதியான,ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க நல்ல தலையணையை பயன்படுத்த வேண்டியது அவசியம்.ஆனால் சில கடினமான தலையணையில் தூங்குவதால் கழுத்து பகுதியில் கடுமையான வலி ஏற்படக் கூடும்.தூங்கி எழுந்ததும் உங்களுக்கு கழுத்து வலி வருகிறது என்றால் நீங்கள் நல்ல தலையணையை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் சரியான தலையணையில் தூங்கவில்லை என்றால் தலைவலி,கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.தூங்கும் போது உங்கள் முதுகெலும்பை நேர்கோட்டில் வைத்திருக்க தலையணை உதவுகிறது.உங்கள் தலையணை தடித்து கடினமாக இருந்தால் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்க நேரிடும்.இதனால் உடல் சோர்வு,மனச் சோர்வு ஏற்படக் கூடும்.

நீங்கள் நடுத்தர தடிமன் கொண்ட தலையணையை பயன்படுத்தி உறங்கினால் கழுத்து வலி ஏற்படாது.நீங்கள் படுத்து உறங்கும் தலையணை காது மற்றும் தோள்பட்டைக்கு இடையே உள்ள இடத்தை நிரப்பியவாறு வைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி,முதுகு வலி ஏற்படமால் இருக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை தலையணை சுத்தம் செய்ய வேண்டும்.தலையில் இருக்கின்ற அழுக்குகள் தலையணையில் படிந்திருக்கும்.எனவே வெந்நீரில் வாஷிங் பவுடர் அல்லது லிக்விட் சேர்த்து தலையணையை சுத்தம் செய்ய வேண்டும்.சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் இரண்டு தலையணையை ஒன்றன் மீது ஒன்று வைத்து படுப்பதால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.