கர்நாடகாவை சுற்றி இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் காவேரி நீர் படுகையானது நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனுமதித்தது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 40 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சம்பா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி சேலம் மாவட்டம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், இதற்கு முன்பு குறைந்த கன அடி நீர் இருந்த சமயத்தில் நாய் ஒன்று அதன் வழியாக சென்றுள்ளது. திடீரென்று அணை திறக்கப்பட்டதால் அந்த நாய் இருந்த இடம் சுற்றியும் நீர் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதனால் எந்த பக்கமும் செல்ல முடியாமல் அந்த நாயானது தவித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே அதே இடத்தில் அந்த நாய் இருப்பதாகவும் தற்பொழுது வரை யாரும் மீட்க வரவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.