கொரோனா பாதித்தவர்களை மோப்ப சக்தியின் மூலம் எளிதில் கண்டறியும் நாய்கள்!!
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் ஓராண்டு காலமாகியும் இன்றளவும் குறையவில்லை.
தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் நோயின் பாதிப்பு முற்றிலும் குறைந்தபாடில்லை.
தொற்றை ஆர்டிபிசிஆர் என்ற பரிசோதனையின் மூலம் கண்டறியப்படுகிறது.
இதன்மூலம் உமிழ்நீர் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து தொற்று உள்ளதா என கண்டறிய படுகின்றனர்.
இந்நிலையில் இந்திய ராணுவம் நாய்களை கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்தப் பயிற்சிக்காக ‘கேஸ்பர்’ என்ற காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களும், ஜெயா, மணி என்ற இரு சிப்பிப்பாறை வகை நாய்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இந்த பயிற்சியில் மூன்று வகை நாய்களும் கொரோனா பாதித்தவரின் உடைகளை சரியாக கண்டுபிடித்தது.
அதாவது கொரோனா பாதித்தவரின் வியர்வை மற்றும் சிறுநீரகத்தின் மூலம்,நாய்கள் தனது மோப்ப சக்தியின் வாயிலாக கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாய்கள் மூலம் தொற்று பாதித்தவர்களை கண்டுபிடிப்பது பரிசோதனை காலத்தை குறைக்கும் வழிமுறையே தவிர முற்றிலும் துல்லியமானதென்று கூறமுடியாது என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் பயன்படுத்தப்படும் மாதிரிகள் அதாவது சிறுநீர் மற்றும் வியர்வை வைரஸ் அழிக்கப்பட்ட மாதிரிகள் என்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.