சர்வதேச விமானங்களைத் தொடர்ந்து உள்நாட்டு விமானங்களும் ரத்து!! பயணிகள் அவதி!!

Photo of author

By CineDesk

சர்வதேச விமானங்களைத் தொடர்ந்து உள்நாட்டு விமானங்களும் ரத்து!! பயணிகள் அவதி!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக சா்வதேச விமானங்கள், இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை பாதிப்பு நமது நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல நாடுகளின் அரசு இந்தியாவுக்கு செல்ல தங்கள் நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் கொரோனாவால் வளைகுடா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானப் போக்குவரத்தை அந்த நாட்டு அரசுகள் தடை செய்துள்ளன. இந்த நிலையில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டு விமானங்களனா திருச்சியில் இருந்து சென்னை மற்றும்  பெங்களூா் பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் தொழில் நுட்பக்ங்கள் காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட அளவில் தீவிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு போன்ற உள்நாட்டு பகுதிகளுக்கு மாலை நேர விமானச் சேவைகள் மட்டும் இருந்தது. கொரோனா பதிப்பு காரணமாக போதுமான பயணிகள் இல்லாததால் திங்கள்கிழமை காலை 11 மணி மற்றும் இரவு 9. 15 க்கு சென்னைக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து செவ்வாய்க் கிழமை சென்னை – திருச்சி – சென்னை இடையே, பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் 2 விமானங்களின்  சேவைகளும்  மாலை நேரத்தில் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.