விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

0
99

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

நடிகர் விஜய்க்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக அயலான், டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.  இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த டான் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவர்களாக நடித்திருந்தார். எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராக நடித்திருந்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரோடக்சன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தன.

இந்த படத்தின் இமாலய வெற்றியை அடுத்து தற்போது இயக்குனர் சிபி சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக இப்போது தன்னுடைய கதையை திரைக்கதையாக மாற்றும் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.