அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார்.
இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்து வரிகள் விதிக்கும் வேலையில் இறங்கினார் டிரம்ப். சில நாட்களுக்கு முன்பு பேசிய டிரம்ப் இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.
அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிகிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியிருக்கிறது.