அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Parthipan K

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு லேசான அறிகுறிகளுடன் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் என்ற தேசிய ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவரின் அதிகாரங்கள் தொடர்ந்து அவரிடம் மட்டுமே நீடிக்கும் என்றும் அவரது பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவார் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.