French Fries சமைத்து பிரச்சாரம் செய்து தனது கட்சிக்கு ஓட்டு சேர்க்க முயலும் நபர் தான் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். குடிகாரன் பேச்சு விடிஞ்ச போச்சு என்று சொல்வது போல “அரசியல்வாதிகளின் பேச்சு உடனே போச்சி” என பிரச்சாரம் செய்யும் பொழுது மக்கள் மனதில் நினைப்பார்கள்.
ஒரு அரசியல்வாதி தனது கட்சிக்கு ஓட்டு கேட்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். எடுத்துக்காட்டாக போக்குவரத்து சாலையில் தூய்மை பணியில் ஈடுபடுவது, மக்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது, கடைகளில் தேநீர் போடுவது, உங்களின் ஒருவன் என வீர வசனங்கள் பேசுவது என பல்வேறு நகைச்சுவை நிகழ்வுகள் நிகழும். அதே போல் தான் இந்த Frenchfries பிரச்சாரம்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிக வாக்குகளைப் பெற டொனால்ட் ட்ரம்ப் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் மெக் டொனால்ட் நிர்வாகியிடம் எனக்கு வேலை வேண்டும் அங்கு வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு ஆசை என பதிவிட்டுள்ளார்.
இதனால் தான் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் French Fries வீடியோ அதிவேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டு கேட்க எப்படி எல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது என இந்த தகவல் மூலம் அறிந்து கொள்ளலாம்.