டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!

Photo of author

By Kowsalya

தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

கொரோனோ உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களுக்கு உடனடியாக தாக்கி விடுகிறது. அதனால் தினமும் சத்துள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

 

 

இந்த கால நிலை மாற்றத்தால் சளி இருமல் காய்ச்சல் என அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து இது சற்று வேறுபடும். இதைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கழுதை பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், என்று தர்மபுரி மற்றும் அதனை உள்ளிட்ட பகுதிகளில் கழுதை பால் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

 

அதுவும் தர்மபுரி, பாலக்கோடு காரியமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கழுதை பால் விற்பனை செம தூளாக உள்ளதாம். வீடு வீடாக சென்று அது கழுதைகள் உடனே ஓடிச்சென்று சளி, இருமல், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே காரணம். அதனால் கழுதை பாலை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறி அங்கேயே கறந்து ஒரு டம்ளர் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனராம்.

அதுமட்டுமில்லாமல் கழுதைப் பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். கொரோனா வராது என்றெல்லாம் நம்பி மக்கள் ஏமாந்து கழுதை பாலை வாங்கி குடித்து வருகின்றனர்.