மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கி விடாதீங்க!
உயிருக்கே ஆபத்து!
சனிக்கிழமை என்றாலே அனைவரும் நடுங்குவார்கள் என்பது உண்மை. சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமையாகும். அதேபோல் வெங்கடாஜலபதியை வணங்குவோரும் சனிக்கிழமைகளில் வணங்குவார்கள். மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு சனிக்கிழமை ஒன்றும் நடுங்கக் கூடிய நாள் அல்ல.சனிக்கிழமைகளில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் தீமைக்கும் பலன் உள்ளதாம் மற்ற நாட்களைவிட சனிக்கிழமை செய்யும் நன்மையும் தீமையும் இரட்டிப்பாகுமாம்.
அதனால் முடிந்த அளவு சனிக் கிழமைகளில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் நல்லது மற்றும் நவகிரகங்களை தேடிச்சென்று சனி பகவானுக்கு நெய் தீபம் விளக்கு ஏற்றி வணங்குவது மிகவும் நல்லது.
சனிக்கிழமைகளில் எந்த பொருட்களை கடனாக வாங்குவதும் கொடுப்பதும் கூடாது என்பதை பார்ப்போம்.
கத்தரிக்கோல்
நீங்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் சனிக்கிழமை அன்று கத்தரிக்கோலை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள் மற்றும் கடனாக வாங்காதீர்கள். ஏனென்றால் இந்த கத்தரிக்கோலை கடனாக வாங்கும் பொழுது நன்றாக போய்க் கொண்டிருக்கும் உறவுகளிடையே மிகப் பெரும் பிளவை ஏற்படுத்துமாம்.
சிவப்பு ஆடை:
எந்த ஒரு காரணத்திற்காகவும் சிவப்பு நிற ஆடையை மற்றவர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள் அல்லது வாங்காதீர்கள். ஏனென்றால் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் மிகப்பெரிய அவமானங்களை சந்திக்க நேரிடுமாம். அதேபோல் சிவப்பு நிற பொருட்களையும் கொடுக்க வேண்டாம் அதுவும் ஆபத்தாம்.
அதேபோல் சனிக்கிழமை அன்று வெள்ளி முத்து பதித்த நகைகளை கடனாக வாங்காதீர்கள் மற்றும் கொடுக்காதீர்கள். அதை செய்தால் விபத்துக்கள் ஏற்படுமாம். நீங்கள் சொந்தமாக வாங்கி விற்றால் எந்தவித பிரச்சனையும் இல்லை ஆனால் கடனாக மட்டும் தரவே கூடாது.
எனவே இதை அனைவரும் மனதில் கொண்டு செயல்படுங்கள். சனி பகவானின் நல்லாசி அனைவருக்கும் கிட்டும்.