இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்!

0
231
Don't call your husband an alcoholic anymore! The court gave a check to the wives!
Don't call your husband an alcoholic anymore! The court gave a check to the wives!

இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்!

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புனே குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண பந்தத்தை ரத்து செய்தது.அந்த உத்தரவுக்கு எதிராக அவருடைய மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அப்போது அவர் தனது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து அவருடைய மனைவி மேல்முறையீட்டு மனுவில் என்னுடைய கணவர் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் அவர் பெண் வெறியர் அதன் காரணமாக அவர் தனது திருமண உரிமைகளை இழந்துவிட்டார் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் எதிர் தரப்பில் அந்த பெண் பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி அந்த பெண்ணின் கணவருக்கு மன வேதனை அளிப்பதாக வாதிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் நிதின் ஜாம்தார் ,ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் கொண்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.மேலும் நீதிபதிகள் மனுதாரர் அவருடைய வாக்குமூலத்தை தவிர அவருடைய கணவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.

மேலும் கணவரின் நடத்தை குறித்து தேவையற்ற ,பொய்யான மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவருடைய மனைவி சுமத்தியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு சமூகத்தில் கணவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.இவை கணவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமானது என குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்யப்பட்டது.

Previous articleடெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை?
Next articleகோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு!