தன்னுடைய அபிமானிகளுக்கு திடீரென்று அதிரடி உத்தரவை பிறப்பித்த சசிகலா!

0
254

சசிகலா தன்னை சந்திக்க வருகை தரும் தொண்டர்களை தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம். நீங்களிருக்கும் இடத்திற்கு வந்து உங்களையெல்லாம் நான் சந்திக்கிறேன்0 உங்களோடு நான் நேரில் உரையாடவிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய பிறந்த நாளுக்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு பயணம் செய்து என்னுடைய இல்லம் தேடி வருவதை தவிர்க்க வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுகவின் பொது செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் என்னுடைய பிறந்தநாளன்று சென்னையிலிருக்கின்ற இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை நான் அறிந்து கொண்டேன், உங்களுடைய அன்புக்கு நான் என்றுமே அடிமை என கூறியுள்ளார்
.

உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது அதேநேரம் நான் மிக விரைவில் உங்களை அனைவரையும் நேரில் வந்து சந்திக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்களையெல்லாம் நான் சந்திக்கவிருக்கின்றேன். நான் தங்களோடு உரையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே தற்சமயம் என்னுடைய பிறந்த நாளுக்காக தாங்கள் சிரமப்பட்டு பயணித்து என்னுடைய இல்லம் தேடி வருவதை தவிர்த்து விட்டு தாங்கள் இருக்கும் பகுதிகளில் தங்களுடைய கண் முன்னே இருக்கும் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு உங்களால் முடிந்த அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே எனக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக மனதார ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அதுவே மறைந்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசாகவும் கருதுகின்றேன் என்னுடைய உயிரிலும் மேலான கழகத் தொண்டர்களே பொறுமையுடன் காத்திருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி இந்த புரட்சித்தலைவர் பாடியதைப் போல இந்த நாடு நம்மை போன்ற நல்லவர்களை உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை, எதிர்பார்த்துதான் காத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே மண்ணை நேசிப்போம் மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று அவருடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Previous articleஇன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!
Next articleஇன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?