விஜயகாந்தை MGR உடன் ஒப்பிடாதீர்கள்! நெட்டிசன்களின் சச்சரவு!

Photo of author

By Kowsalya

கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் 2023 ஆண்டு தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மூச்சு திணறலில் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னுமும் மக்கள் அந்த துயரிலிருந்து மீளவில்லை என்று சொல்லலாம்.

 

கேப்டன் விஜயகாந்த் ஒரு எம்ஜிஆர் ரசிகர் எம்ஜிஆரின் படங்களையும்,நல்ல கருத்துக்களையும், அவரது திறனையும் கண்டு வியந்து அவரின் தீவிர ரசிகனாக மாறி அவரது வழியை பின்பற்றியவர். அதனால் தான் பின்னாலில் அவருக்கு கருப்பு எம்ஜிஆரின் என்ற பெயரை வந்தது என்று சொல்லப்படுகிறது.

 

அப்படி இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்துள்ளது ,அது என்னவென்றால் இருவருமே டிசம்பர் மாதம் இறந்துள்ளனர். அதேபோல் மார்கழி மாதத்தில் இறந்துள்ளனர். ஒரே நாளில் வியாழக்கிழமை இறந்துள்ளனர். பொதுவாக மார்கழி மாதத்தில் இருந்து இறந்தால் சொர்க்கத்தை அடைவார்கள் என்று பெயர் .அதனால்தான் என்னவோ அவரின் இறுதி சடங்கின் பொழுது கழுகு ஒன்று வட்டமட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

 

இப்பொழுது வலைதளங்களில் எம்ஜிஆர் விஜயகாந்த் இருவருக்கும் இருந்த ஒற்றுமை, இருவரும் ஒன்றே என்று வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக நெட்டிசன்கள் பயங்கர கோபத்துடன் கமெண்ட்களை அளித்தெளித்து வருகின்றனர்.

 

தயவுசெய்து கேப்டன் விஜயகாந்த் உடன் எம்ஜிஆரை ஒப்பிடாதீர்கள். விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர், அனைவருக்கும் உணவிட்டு சந்தோஷப்பட்டவர்,

ஆனால் எம்ஜிஆர் அப்படி கிடையாது.

பல ஊழல் செய்தார். பல கோடி சொத்து மதிப்புகளை சேர்த்தார். தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பரிசாகவும் சரி இனாமாகவும் அரசு நிலங்களை தந்தார்.

 

ஆனால் கேப்டன் அப்படி கிடையாது அவர் தான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்தார். தான் என்ன சாப்பிடுகிறாரோ? அதே தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து சாப்பிட்டவர் அவர். அதனால் எம்ஜிஆரை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். என பல கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

 

ஆனால் எம்ஜிஆரின் வழியை பின்பற்றி நடந்தவர் தான் கேப்டன். எம்ஜிஆர் எண்ணமும், அனைவரும் சமம் என்ற செயலும், சினிமாவில் நடிப்பாலும், அரசியலில் திறனாலும் அனைத்து மக்களின் உள்ளங்களை வென்றவர் எம்ஜிஆர். அப்படி அவர் வழியை பின்பற்றித்தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வந்தார் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

 

அதனால் இந்த சச்சரவுகள் பயனற்றது.