ஒருவருடைய சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது!! தவெக கட்சித் தலைவர்!!

Photo of author

By Gayathri

நேற்று சென்னையில் உள்ள பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையகத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

நடந்து முடிந்த மாநில அளவிலான தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து வரும் விமர்சனங்கள் உண்மை எனில் ஆதாரத்துடன் அதற்கு பதில் அளிப்போம் என்று இக்க கட்சித் தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் உட்பட மற்ற கட்சி தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என தன்னுடைய செயற்குழு உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இந்த கூட்டத்தில் இக்கட்சியின் பொது செயலாளர் என். ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மக்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 26 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இக்கட்சியின் தலைவர் பேசும்பொழுது, நம்முடைய கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். கூட்டணி குறித்து பிறகு ஆலோசிப்போம் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், யாரையும் இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க கூடாது என்றும், நாம் அளிக்கும் பதில் அவதூறாக இருக்கக் கூடாது பதிலாக ஆதாரத்துடன் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு கட்சித் தலைவரின் பாதுகாப்பிற்காக தொண்டரணி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விஜயின் உருவம் பொறித்த மஞ்சள் நிற டி-ஷர்ட் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.