DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, இத்திட்டத்தினால் அதிருப்த்தி அடைந்த பெண்கள், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இரண்டு லட்சம் பேரை மீண்டும் இத்திட்டத்தின் மூலம் இணைத்தனர்.
இப்படி இருக்கையில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இத்திட்டம் செல்லுபடி ஆகாது எனக் கூறினர். அரசு ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர்த்து இதர தரப்பினர் எங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் நாட்களில், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மனைவிகள் என அனைவருக்கும் உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும் எனக் கூறினர். இப்படி வழங்கப்படும் உதவி தொகையானது ஒரு சில தவறுகளால் கிடைக்காமல் போகும். அதாவது நமது வங்கி கணக்கு எண் மற்றும் அதில் இணைத்திருக்கும் மொபைல் நம்பர் உள்ளிட்டவற்றை சரியாக கொடுத்தல் அவசியம்.
மாற்றி கொடுக்கும் பட்சத்தில் இத்திட்டம் செல்லுபடியாகாமல் போகும். அதேபோல இனி வரும் நாட்களில் மாதம்தோறும் இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு சரிபார்த்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.