கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள்!

0
172

எப்போதும் கோவிலில் அவசர அவசரமாகவோ அல்லது கோபமாகவோ பூஜை செய்வதோ வாங்குவதோ கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக நடந்து செல்லக்கூடாது, நிறைமாத கர்ப்பிணி பெண் தலையில் எண்ணென் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாரோ அப்படி நடக்க வேண்டும்.

மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதையோ செய்யக்கூடாது.

கோவிலிலுள்ள திருவிளக்குகளை கையாள் தூண்டி விடவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ, கூடாது.

அதேபோல இறைவனுக்கு நெய் வைத்தியமாகும் போது பார்க்க கூடாது, விபூதி, சந்தனம், அபிஷேகத்தை தவிர்த்து சாமிக்கு மற்ற திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது.

சாமிக்கும், நந்திக்கும், குறுக்கே செல்லுதல், சிவ நிர்மால்யங்களை தூண்டுதல், மிதித்தல், உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது.

ஸ்தூபி , கொடிமரம், பலிபீடம், விக்ரகம், உள்ளிட்டவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. மற்றவர்கள் வீட்டில் அன்னம் சாப்பிட்ட தினத்தன்று கோவிலுக்கு செல்லக்கூடாது.

கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, கொண்டு செல்ல வேண்டும் .மற்றவர்களின் பொருளை வாங்கி இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது.

வீட்டில் நாள்தோறும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது. மரண தீட்டு உள்ளவர்களோ அல்லது தீட்டு உள்ளவர்களோ அல்லது அந்த தீட்டு உடையவரை தொட்ட பிறகு குளிக்காமலோ, கோவிலுக்கு செல்லக்கூடாது.

கருப்பு நிற உடையணிந்து கோவிலுக்கு செல்லக்கூடாது.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!
Next articleஇந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!