பசித்தபின் புசி என்று நமது முன்னோர்கள் சொல்வர்.பசித்த பின் சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவது மட்டும் சரியான உணவுப் பழக்கம் அல்ல.சாப்பிட்டவுடனேயே அல்லது சாப்பிடும்போதே சிலவற்றை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் உடல்ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சாப்பிட்டவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பது, பழங்களை சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் உறங்குவது , போன்ற தவறுகளை நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்துவருகிறோம். இதனால் நாம் பெரும் வயிற்று பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.நாம் சாப்பிட்ட உடனே என்னென்ன செய்யக்கூடாது என்பவனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சிலர் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு நிறைய குடித்தால் மட்டுமே வயிறு நிரம்பியதாக உணர்வர். ஆனால் இது மிகப்பெரிய தவறு ஆகும் அவ்வாறு சாப்பிட்டவுடன் நம் தண்ணீர் குடிப்பதால் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இதனால் பல நோய்கள் வர காரணமாகிறது.சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்ததாகும்.
சாப்பிட உடன் படுத்து விடக்கூடாது காரணம் இரைப்பையும் ஓய்வெடுக்க தொடங்கிவிடும். இதனால் ஜீரணம் பாதிக்கப்படும்.
சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது ஏனெனில் ஜீரணமாவதற்கு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் நாம் குளித்தவுடன் நம்முடல் குளிர்ந்துவிடும், வெப்பநிலையும் குறைந்து விடும். இதனால் ஜீரண மண்டலம் பாதிக்கும். இரண்டு மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் பழங்களை உண்ணக்கூடாது காரணம் பழத்தில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கப் பெறாது. சாப்பாடும் பழங்களும் ஒன்றாக சேரும் போது எதிர்மறையான பாதிப்புகளை உண்டாக்கும்.
சாப்பிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமாவது கடுமையாக பாதிக்கப்படும். இதனால் சுகர் வர நேரிடும். பற்களும் துர்நாற்றம் வீசும்.
குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்கக்கூடாது. இது உடலின் வெப்பநிலையை குறைத்து விடும். அதுமட்டுமல்லாமல் உணவில் உள்ள எண்ணெய்த் தன்மையை கட்டியாகி விடும். இதனால் வயிறு தொப்பை போடும் பிரச்சனை ஏற்படும்.
சாப்பிட்ட உடன் வேகமாக நடப்பதோ கடினமான வேலைகளை செய்வதோ கூடவே கூடாது.நாம் உண்ட உணவு கீழ்நோக்கிப் போவதற்கு பதிலாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல் வாய்வு தொல்லை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஓய்வு தேவை.
ஆரோக்கியமான உணவை அளவாகவும் முறையாகவும் உண்டு நம் உடல் நலத்தை பேணி காப்போம்.