சொந்த மாவட்டத்திலேயே துணை முதல்வரின் செல்வாக்கை சரிக்க திமுக சதித்திட்டம்! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்!

0
132

தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பாக அவர்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போன்றோரிடம் நேரிலேயே சென்று அந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவருடைய எந்த கோரிக்கையானது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை சீர்மரபினர் நல சங்கத்தினர் நடத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

கம்பம், அம்மாபட்டி, சின்னமனூர் போன்ற பகுதிகளில் இந்த சங்கத்தை சார்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தியவாறு வீடுவீடாகச் சென்று தங்களுடைய சமுதாயத்தினர் காலில் விழுந்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகிறார்கள். கம்பம் சட்டசபைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இளையமகன் ஜெயபிரதீப் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவிற்கு எதிராக கிளம்பி இருக்கின்ற இந்த எதிர்ப்பு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.ஆனால் அவர்களுடைய இந்த போராட்டத்திற்கு மூலகாரணமாக செயல்பட்டு வருவது எதிர்கட்சியான திமுக தான் என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் முதல்வரின் மாவட்டமாக இருந்தாலும் கூட திமுகவின் செல்வாக்கு அதிகமாக தான் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அங்கே முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் இன்றளவும் திமுகவை ஆதரித்து வருகிறார்கள் அதன் வழியாக அங்கே திமுகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருந்து வருகிறது.ஆனால் தேனி மாவட்டத்தில் அதிமுகவை மீறி எதிர்க்கட்சியான திமுகவால் வளரவே முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அவருடைய செல்வாக்கை அந்த மாவட்டத்தில் சரித்து விடலாம் என்ற காரணத்திற்காகவே இதுபோன்ற ஒரு சில காரியங்களில் மறைமுகமாக திமுக ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும் இதற்கெல்லாம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. எப்பொழுதும் போல அவர் தன் வேலைகளை செய்துதான் வருகின்றார் எப்பொழுதும் போல மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கான வேலைகளை செய்து வருகின்றார். ஆனாலும் திமுகவும் தன்னுடைய முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. இப்படி அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்யலாம் என்று முடிவுகட்டி அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாக தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து வரும் பன்னீர்செல்வத்தின் அதிகாரபலம், தொண்டர்களின் பலம் மற்றும் பணபலம் போன்றவற்றை கடந்து திமுக தேனி மாவட்டத்தில் மீண்டெழுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Previous articleப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!
Next articleமகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!