இனி இந்த 5 இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்கள்!! அப்படி ஓட்டினால் அபராதம் என்று எச்சரிக்கை!!
இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லாமல் வாகனத்தில் சென்றீர்கள் என்றால் அபராத தொகை கொடுக்க வேண்டியது இருக்கும். மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியகமாக இருக்க வேண்டும்.
முதலில் ஓட்டுநர் உரிமம் மிக முக்கியமான ஒன்று. இந்த உரிமம் இல்லாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, 5000 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் ஓட்டுநர் உரிமம் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பூட்டான், கனடா, அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் .
அதனையடுத்து வாகனத்தின் ஆர்சி புக் இருக்க வேண்டும். மேலும் அந்த சான்றிதழில் உரிமையாளர் பெயர், இன்ஜின் விவரங்கள் மற்றும் வாகனத்தின் பெயர் சரியாக இருக்க வேண்டும். இந்த சான்றிதழில் இல்லாமல் நீங்கள் சென்றீர்கள் என்றால் உங்களிடம் 10000 ரூபாய் வரை அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை வித்திக்கப்படும். அதனை தொடர்ந்து இரண்டாவது முறை மீண்டும் அவ்வாறு சென்றால் 15000 ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் வாகனத்திற்கான இன்சுரன்ஸ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தற்போது இந்திய அரசின் PUC சான்றிதழ் மிகவும் அவசியம். மேலும் வாகனம் ஓட்டும்போது இந்த ஆவணம் வைத்திருப்பது அவசியம். இந்த சான்றிதழ் இல்லாவிடின் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து வாகனம் ஒட்டும்போது அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் அவசர காலங்களில் ஆதார் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு ஆவணங்களை எப்பொதும் வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.