வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

Divya

தலையில் காணப்படும் வெள்ளை முடி கருமையாக இங்கு தரப்பட்டுள்ள இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் பவுடர் – ஒன்றரை தேக்கரண்டி
2)பாதாம் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் 100 கிராம் அளவிற்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் பரப்பி காய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

வற்றல் பதத்திற்கு நெல்லிக்காய் காய்ந்து வந்ததும் அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு இந்த பெரிய நெல்லிக்காய் பவுடரை ஒரு கிண்ணத்திற்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து ஒன்றரை தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை தலையில் உள்ள வெள்ளை முடி மீது அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்க வேண்டும்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இந்த மாதிரி செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அடர் கருமையாகும்.வாரம் ஒருமுறை என்று தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இதை செய்தால் தலையில் உள்ள மொத்த முடியும் கருப்பாக மாறிவிடும்.

தலைமுடியை கருமையாக்கும் மற்றொரு ஹேர் டை தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)செம்பருத்தி பூ பொடி – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)ஷாம்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் இதை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி பூ பொடி,இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் தடவ வேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து தளமுடையை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு தலைமுடியை உலர்ந்த பிறகு ஒரு தேக்கரண்டி மருதாணி பொடி,ஒரு தேக்கரண்டி அவுரி பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் அப்ளை செய்து ஊறவைத்து குளித்தால் வெள்ளை முடி கருமையாகும்.