தலைநரை கருமையாக ஹேர் டை வேண்டாம்.. இந்த ஒரு ஜூஸ் செய்து பருகுங்கள் போதும்!!

0
162

மாறிவரும் வாழ்க்கை முறையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போல் தலைமுடியும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.கடந்த சில வருடங்களாக பெரும்பாலானோர் முடிகொட்டால் பிரச்சனையை சந்தித்து வருவது அதிகரித்து காணப்படுகிறது.முடி வெடிப்பு,இளநரை,பொடுகு,வழுக்கை,முடி வறட்சி போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் உள்ளது.நெல்லிக்காய்,இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் இளநரையை விரைவில் கருமையாக்கும் திறனை கொண்டிருக்கிறது.தலை முடியை கருமையாக்க நினைப்பவர்கள் இனி ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதில் இந்த ஜூஸ் செய்து பருகி வந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் துண்டுகள்
2)இஞ்சி துண்டு
3)புதினா இலைகள்
4)வெள்ளை சர்க்கரை
5)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஜூஸ் செய்ய முதலில் பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளை அதில் சேர்க்க வேண்டும்.

பிறகு சுவைக்காக வெள்ளை சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்து முதலில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து பருகி வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் நாளடைவில் கருமையாக மாறிவிடும்.

இந்த பானத்தை தினமும் காலை நேரத்தில் பருகி வந்தால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் தலை,முடியை கருமையாக்க உதவுகிறது.

Previous articleபளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!
Next articleபுற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!