இனி உங்கள் ஆபீசில் லீவ் தரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
உங்கள் ஆபீஸில் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு விடுமுறை தரவில்லை எனில் இவ்வாறு செய்யுங்கள். பொதுவாக நாம் வேலைக்கு செல்லும் இடத்தில் நமக்கென மாதம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும்.
அதாவது இதை CL ( casual leave) என்று கூறுவார்கள். இவ்வாறு விடுமுறை எடுப்பதால் இதற்காக ஊதியத்தில் எந்த ஒரு குறைவோ இருக்காது. எனவே வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மாதத்திற்கு ஒரு நாள் நமக்கு இந்த விடுமுறை அளிக்கப்படும்.
இதே போல் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கும் மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு 12 நாட்கள் என்று விடுமுறை உள்ளது. இதை SL (sick leave) என்று கூறுவார்கள். இதற்கும் எந்த விதமான ஊதிய குறைவும் வராது.
ஆனால் உடல்நிலை சரி இல்லாததற்கு சாட்சியாக மருத்துவச் சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். இந்த CL மற்றும் SL என்று இரண்டு விடுமுறையும் முடிந்திருக்கும் பட்சத்தில் நமக்கு இன்னும் விடுமுறை தேவைப்பட்டால் அதை EL ( earned leave ) என்று கூறுவார்கள்.
இதன் மூலமாக வருடத்திற்கு 12 நாட்கள் நமக்கு விடுமுறை கிடைக்கும். இதற்கும் ஊதியத்தில் எந்தவித குறைவோ இருக்காது. இந்த மூன்று விடுமுறையிலும் உதாரணத்திற்கு நாம் வருடத்திற்கு 12 விடுமுறை நாட்களில் ஆறு நாட்கள் தான் எடுத்திருக்கிறோம் என்றால் மீதமுள்ள ஆறு நாட்கள் அடுத்த ஆண்டிற்கு மாற்றப்படும் அல்லது சில நிறுவனத்தில் இந்த ஆறு நாட்களுக்கு தொகையை வழங்கி விடுவார்கள்.
இந்த விடுமுறை பாலிசி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும். குறிப்பாக இந்த விடுமுறை அனைத்தும் மூன்று மாதங்கள் தொழிலாளர்கள் நிறைவு செய்த பிறகே பொருந்தும்.