மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!
திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை.
எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி உறவினர் நண்பர்கள் வந்தால் இதே போல் அவர்களுக்கு உதவியும் செய்கின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து பலமுறை கண்டித்தும் யாரும் கேட்காததால் தற்பொழுது மற்றொரு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர். இந்த புதிய திட்டம் என்னவென்றால் பேஸ் ஐடிபிகேஷன் என்பது தான், அதாவது முக அடையாளம் இனிவரும் பக்தர்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்படும்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வரும் பக்தர்கள் அவர்கள் தங்களது உடைமைகளை வைக்கும் இடம் அல்லது தங்குவதற்கான அறையை பெறும் இடம் என அனைத்திலும் இந்த பேஸ் டெக்னாலஜி பொருத்தப்படும். குறிப்பாக லட்டு பெரும் இடத்திலும் இந்த புதிய டெக்னாலஜி அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.
இந்த பேஸ் டெக்னாலஜி மூலம் ஒரு வாரத்தில் எத்தனை நபர்கள் வருகின்றனர் வந்தவர்களே மறுபடியும் வருகிறார்களா என்பதை இதன் மூலம் கண்டறிந்து விடலாம்.
வருந்தவர்களே ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் வந்தார்கள் என்றால் அதுவும் இந்த பேஸ் டெக்னாலஜி காட்டி கொடுத்து விடும். இதனை அடுத்து அந்த உரிய நபர் மீது தேவஸ்தானம் தக்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளனர்.