16-10-2020 புரட்டாசி கடைசி அமாவாசை! இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

0
126

16 10 2020 புரட்டாசி கடைசி அமாவாசை தவற விடக்கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. புரட்டாசியில் வரக்கூடிய இரண்டாவது அமாவாசை அதுவும் வெள்ளிக்கிழமை வருவது மிகவும் சிறப்பு. பொதுவாக அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடிய நாள் என்று கூறுவார்கள்.

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம். அதுவும் புரட்டாசியில் வரக்கூடிய கடைசி நாள் அமாவாசையாக அமைந்து இருக்கிறது. மகாளய அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்த நாளில் அருகில் நீர்நிலைகள் இருந்தால் அங்கு சென்று முன்னோர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு பசியும் தாகமும் அடங்குமாறு எள்ளையும், தண்ணீரையும் இறைத்து வழிபடுங்கள். மேலும் முடிந்த அளவிற்கு பிறருக்கு அன்னதானம் செய்து விட்டு வீடு திரும்புங்கள்.

அப்படியும் நீர்நிலைகளுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே எள்ளையும் தண்ணீரையும் இறைத்து காகத்திற்கு உணவளித்து முன்னோர்களின் பெயரைச் சொல்லி அவர்களை நினைவுகூர்ந்து படையலை படைத்து விரதம் இருங்கள்.

நாளை முக்கியமாக செய்ய வேண்டிய விசயங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, காகத்திற்கு உணவு அளிப்பது, அன்ன தானம் அளிப்பது. இவை மூன்றும் நாளை செய்துவிட்டால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

உங்களால் முடிந்தவரை மிகவும் ஏழை எளியவர்களை ஒருவரையாவது வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து விட்டு பின் உங்கள் குடும்பத்தோடு நீங்கள் அமர்ந்து உண்ணும் பொழுது முன்னோர்கள் மனம் மகிழ்ந்து அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு அளிப்பர்.

நிறையப் பேர் மறக்கக் கூடிய ஒரு விஷயம் விரதமிருந்தால் அன்றைக்கு வாசலில் கோலம் போடக்கூடாது. நன்கு தண்ணீர் தெளித்து சுத்தமாக கூட்டி விட வேண்டும். ஆனால் கோலம் போட வேண்டாம். மறந்து கோலம் போட்டு விட்டால் அதை கழுவி விட வேண்டும். மாலையில் கண்டிப்பாக வாசலை சுத்தம் செய்து கோலம் இட வேண்டும்.

முக்கியமாக சமைக்க வேண்டிய உணவுகள் வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாளில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையை தரும்பொழுது பசு மாட்டில் உள்ள அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் நமக்குக் கிட்டும்.

அனைத்து விரதங்களும் முடிந்த பிறகு மாலையில் கண்டிப்பாக பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். காலையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. முன்னோர்களின் படத்திற்கு மட்டும் தீபம் ஏற்றி இருக்கலாம்.

மாலையில் கண்டிப்பாக வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி மட்டுமில்லாமல் குலதெய்வத்தின் ஆசியும் உங்களை வந்தடையும்.

Previous articleஇந்த ராசிக்கு பொன் பொருள் சேரும்! இன்றைய ராசி பலன் 16-10-2020 Today Rasi Palan 16-10-2020
Next articleஇந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!