எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

0
330
Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!
Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!
எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!
கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் டிடிவி தினகரன் அவர்கள் “தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நான் செல்லும் இடங்களில் இருக்கும் மக்கள் அனைவரும் தேர்தலில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்று கூறுகின்றனர். அது குறித்து நான் எந்தவொரு கருத்து கணிப்பும் நடத்தவில்லை.
கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்டது முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த எந்தவொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அவ்வளவாக இல்லை. 2011ம் ஆண்டுக்கு பிறகு தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை பெரிய அளவில் பரவ விட்டுள்ளனர்.
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கெடுத்தது பழனிச்சாமி கோஷ்டியினர் தான் எங்களுக்கு அது தெரிந்து அவர்கள் டோக்கன் கொடுத்தது தெரிந்த பின்னர் அதை நான் தடுத்து நிறுத்தினேன். நான் ஆர்கே நகர் தேர்தலுக்கு பணம் கெடுத்து வெற்றி பெறவில்லை. தற்பொழுது நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு டோக்கன் கொடுத்தது யார் என்பது உங்களுக்கே தெரியும்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் பா.ஜக கட்சி மீது மிகுந்த மரியாதை உள்ளது. அதனால் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுக கட்சி என்னுடைய கைக்கு வரும் என்று கூறினார்.
அண்ணாமலை நன்கு படித்தவர். அவர் மூன்று ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகின்றார். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் அதிமுக அழிந்துவிடக் கூடாது என்ற அக்கறையுடனும் தான் அண்ணாமலை அவர்கள் அதிமுக என்னுடையது என்று பேசினார்.
மக்களுக்கு நான் கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களில் என்னால் முடிந்த அளவு நல்லது செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வருவார். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.
மேலும் இந்த பேட்டியில் டிடிவி தினகரன் அவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்விக்கு அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் “நான் இங்கு கோயில் திருவிழாவுக்கு சாமியை தரிசனம் செய்யலாம் என்று வந்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறித்து கேள்வி கேட்டு என்னை டென்சன் ஆக்கிவிடாதீர்கள்” என்று கூறினார்.
Previous articleஅலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!
Next articleவிசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!